MARC காட்சி

Back
திருக்கோட்டியூர் சௌம்யநாராயணப்பெருமாள் கோயில்
245 : _ _ |a திருக்கோட்டியூர் சௌம்யநாராயணப்பெருமாள் கோயில் -
246 : _ _ |a திருக்கோட்டியூர், உரக மெல்லணையான், திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட ஷீராப்தி நாதன், பன்னக மருதுசாயி
520 : _ _ |a பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டது. மொத்தம் 40 பாசுரங்கள் மங்களாசாசனம். திருக்கோட்டியூர் வாழ்ந்த செல்வ நம்பிகளைத்தான் பெரியாழ்வார் தம் பாசுரத்தில் அவ்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர் கோன் அபிமான துங்கன் செல்வன் என்று தனக்கு பரதத்துவ நிர்ணயம் செய்ய உதவி செய்ததைக் குறிக்கிறார். இவ்வூரின் செல்வநம்பிகள் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனை புரோகிதர் ஆவர். பராசர பட்டர் என்பவர் கூரத்தாழ்வாருடைய திருக்குமாரர். வீரசுதந்திர சிம்மராயன் என்னும், சிற்றரசன் திருவரங்கன் கோயிலை ஜீர்னோத்தரணம் செய்கையில் “திருவீதி பிள்ளை பட்டர் என்பாரின் திருமாளிகை மதிற்புரத்து மூலையில் இருந்தது. அதை இடித்து அப்புறப்படுத்த சிற்றரசன் முனைந்தபோது மனம் வெதும்பிய பராசர பட்டர் சிற்றரசனை பகைத்துக்கொண்டு திருவரங்கத்தினின்றும் வெளியேறி 1 1/2 ஆண்டுகள் திருக்கோட்டியூரில் தங்கி இருந்தார். இவர் கோஷ்டிஸ்தவம் என்னும் நூல் எழுதியுள்ளார். இராமானுஜரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. செந்நெற்குடி புலவர் சுப்புராயலு என்பர் சௌமிய நாராயண மூர்த்திப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இப்பெருமானுக்கு யாத்துள்ளார். சிவகங்கை சமஸ்தானத்து வாரிசினர் தொன்று தொட்டு இத்தலத்திற்குப் பெருந்தொண்டு புரிந்து வருகின்றனர்.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், பாண்யன் வல்லப தேவன், திருக்கோட்டியூர், திருக்கோஷ்டியூர், சௌம்யநாராயணப் பெருமாள், உரக மெல்லணையான், மங்களாசாசனம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200ஆண்டுகள் பழமையானது. பெரியாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி.
914 : _ _ |a 10.06107155
915 : _ _ |a 78.56082363
916 : _ _ |a உரக மெல்லணையான், திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட ஷீராப்தி நாதன், பன்னக மருதுசாயி
917 : _ _ |a சௌம்ய நாராயணன்
918 : _ _ |a திருமாமகள் நாச்சியார்
923 : _ _ |a தேவபுஷ்கரணி (திருப்பாற்கடல்)
925 : _ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
926 : _ _ |a மாசி தெப்பத்திருவிழா, வைகுண்ட ஏகாதசி
927 : _ _ |a முகம்மதிய படையெடுப்பின் போது இப்பெருமானை (உற்சவரை) கும்பகோணத்தில் மறைத்து வைத்திருந்தனர், என்றும் அதற்கு காரணமாய் இருந்த அமுதனுக்கு நன்றிப்பாக்கள் பாடப்பட்டன என்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். முதல் தளத்தில் “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற” திருப்பாற்கடல் நாதனாகப் பள்ளி கொண்ட காட்சி. பாற்கடலில் இருந்து எழுந்துவந்த காரணத்தால் ஷீராப்தி நாதனாக முதல் தளத்திலும், அதன்பிறகு இரண்டாவது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் மூன்றாவது தளத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் பெருமாள் எழுந்தருளியுள்ளார். தூய வெள்ளியில் உற்சவருக்கு விக்ரகம் உள்ளது. அஷ்டாங்க விமானத்தில் தென்திசை நோக்கிய நரசிம்மனுக்கு தெற்காழ்வான் (தட்சினேஸ்வரன்) என்றும், வடதிசை நோக்கிய நரசிம்மனுக்கு வடக்காழ்வான் (உத்தரேசுவன்) என்பதும் திருநாமம். திருக்கோட்டியூர் நம்பிகள் சன்னதியில் அவரின் திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன், சீதை, இலட்சுமணன், அனுமான், பவிஷ்யதாச்சாரியர் விக்ரகமும் எழுந்தருளியுள்ளன.
930 : _ _ |a பிர்ம்மாண்ட புராணத்தில் 6 அத்தியாயங்களிலும், பிரம்ம கைவர்தத்தில் இரண்டு அத்தியாயங்களிலும் இத்தலம் பற்றிச் சிறப்பித்துப் பேசப்படுகிறது. பிரம்மனைக் குறித்து தவமிருந்த இரண்யன், தனக்கு தேவர்களாலும், மனிதர்களாலும், விலங்குகளாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் பெற்று, தேவர்களையுந் துன்புறுத்தி, உலகெங்கும் நமோ ஹிரண்யாய நமஹ என்றே சொல்லுமாறு செய்து வந்தான். இரண்யனின் இம்சை பொறுக்காத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட, சிவன் வரங்கொடுத்த பிரம்மாதான் இதற்கு உபாயம் சொல்ல முடியுமென்று சொல்ல பிரம்மரோ ஸ்ரீமந் நாராயணன் ஒருவனால்தான் இரண்யாட்சகனுக்கு சரியான முடிவு கட்ட முடியும் என்று கூற எல்லோரும் திருமால் பள்ளிகொண்டுள்ள பாற்கடலுக்கு விரைந்து பணிந்து நின்று விபரங்கூறினர். இவர்களின் குறையைக் கேட்ட ஸ்ரீமந் நாராயணன் எல்லா உலகங்களிலும் இரண்யனின் ஆதிக்கம் மேலோங்கிவிட்டது. இரண்ய நாமம் ஒலிக்காத இடம் எங்காவது இருந்தால் கூறுங்கள் அங்கு சென்று நாமெல்லாரும் ரஹஸ்யமாய் இரண்யவதம் செய்வது பற்றிப் பேசலாம் என்று சொன்னதும், பூவுலகில் ஸ்ரீமந் நாராயணனை சீராப்தி நாதனாகக் காண வேண்டுமென்று “கதம்பரிஷி” கடுந்தவம் புரிகிறார். எந்நேரமும் நாராயண மந்திரம் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த ஒரு ஆஸ்ரமம் தான் இரண்யாதிக்கம் செல்லாத இடம். இப்போது நாம் கூடிப் பேசுவதற்கு அதுவே உகந்த இடம் என்று பிரம்மதேவன் கூற தேவர்களும் மும்மூர்த்திகளும் கதம்பரிஷியின் ஆஸ்ரமத்திற்கு எழுந்தருளி, அம்முனிவரின் தவப்பயனாக சீராப்திநாதனாக எம்பெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து, இரண்ய சம்ஹாரத்தைப் பற்றி பேசி முடித்தனர். பேசி முடித்தபின், மற்றெல்லோரையும் கதம்பரிஷியின் ஆஸ்மரத்திலேயே மறைந்திருக்கச் செய்து தான் மட்டும் திருப்பாற்கடலுக்கு எழுந்தருளினார் ஸ்ரீமந்நாராயணன். மும்மூர்த்திகளுடன், தேவர்களும், ஸப்தரிஷிகளும் கூட்டம் கூட்டமாய் இவ்விடத்திற்கு (கோஷ்டி கோஷ்டியாய்) வந்தமையால் திருக்கோஷ்டியூர் ஆயிற்று. (திருக்கு + ஓட்டியூர்) திருக்கு என்றால் பாவம். எனவே பாவங்களை ஓட்டக்கூடிய ஊர் என்றும் பொருள்படும். திருக்கோட்டியூர் அமைந்துள்ள இடத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம் பின்வருமாறு கூறுகிறது. “காவேரி நதிக்குத் தெற்குப் பக்கத்தில் விருஷபாசலத்திற்கு (அழகர் கோவிலுக்கு) கீழ்ப்புறத்தில் புண்ணியமாய் சக்தியையுடைய மணிமுத்தா நதிக்கரையில் பரமாத்ம ஞானம் பிறந்த பாகவதர்கள் தங்குமிடமாய் நான்கு யோஜனை விஸ்தீரணமாய் (யோஜனை 10 மைல்) கதம்ப மஹரிஷியின் ஆஸ்ரமம் அமைந்துள்ளது. பாற்கடலுக்கு எழுந்தருளின பரந்தாமன், தனது அருகாமையில் இருந்த சங்கு கர்ணனைப் பார்த்து நீ சென்று இரண்யன் மனைவி வசந்தமாலையின் வயிற்றில் பிரஹலாதனாகப் பிறக்க கடவாய் எனக் கூற, அவ்விதமே பிரஹலாதன் பிறந்து நாராயண மந்திரத்தைச் சொல்ல, எங்கேயடா உன் நாராயணன் என்று இரண்யன் கேட்க, தூணிலிருப்பான், துரும்பில் இருப்பான் என, பிரஹலாதன் சொல்ல, இத்தூணில் உள்ளானோ என்று “பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப, பிறையெயிற் றண்ணல் விழி பேழ்வாய், தெள்ளிய சிங்கமாகிய” தேவாய்த் தோன்றி இரண்யனைக் கொன்று நரசிம்மவதாரம் முடிவுற்றது. இதையெல்லாம் அறிந்த கதம்பரிஷி ஸ்ரீமந் நாராயணன் இரண்யனைப் பிடித்தது கொன்றது போன்றவற்றைக் குறிக்கும் மங்கள விக்ரகங்களைத் தனக்குத் தரவேண்டுமென்று பிரம்மனை வேண்ட, பிரம்மன், தேவசிற்பியான விஸ்வகர்மாவையும், அசுர சிற்பியான மயனையும் அழைத்து தேவலோகத்தில் உள்ளது போன்ற விமானத்தை இவ்விடத்தில் எழுப்புங்கள் என்று சொல்ல, மூன்றடுக்குகள் கொண்டதான அஷ்டாங்க விமானத்துடன் அழகிய கோவிலை நிர்மாணித்து முடித்தனர்.
932 : _ _ |a மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம் இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a பட்டமங்கலம் குருபகவான் கோயில், வயிரவர் கோயில், வடக்கு வாழ் செல்வி கோயில், வளநாடு கருப்பர் கோயில்
935 : _ _ |a இத்திருப்பதி பசும்பொன் முத்துராமலிங்கர் மாவட்டத்தில் உள்ளது. திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை செல்லும் பேருந்துகள் யாவும் திருக்கோட்டியூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். கோவிலின் வாசலிலேயே பேருந்துகள் நிற்கும். காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லாமல் நேராக திருக்கோஷ்டியூர் செல்லும் பேருந்தும் உள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை
937 : _ _ |a திருக்கோஷ்டியூர்
938 : _ _ |a மானாமதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a திருக்கோஷ்டியூர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000178
barcode : TVA_TEM_000178
book category : வைணவம்
cover images TVA_TEM_000178/TVA_TEM_000178_திருக்கோட்டியூர்_சௌம்யநாராயணப்பெருமாள்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000178/TVA_TEM_000178_திருக்கோட்டியூர்_சௌம்யநாராயணப்பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_000178/TVA_TEM_000178_திருக்கோட்டியூர்_சௌம்யநாராயணப்பெருமாள்-கோயில்-0002.jpg

TVA_TEM_000178/TVA_TEM_000178_திருக்கோட்டியூர்_சௌம்யநாராயணப்பெருமாள்-கோயில்-0003.jpg

TVA_TEM_000178/TVA_TEM_000178_திருக்கோட்டியூர்_சௌம்யநாராயணப்பெருமாள்-கோயில்-0004.jpg

TVA_TEM_000178/TVA_TEM_000178_திருக்கோட்டியூர்_சௌம்யநாராயணப்பெருமாள்-கோயில்-0005.jpg

TVA_TEM_000178/TVA_TEM_000178_திருக்கோட்டியூர்_சௌம்யநாராயணப்பெருமாள்-கோயில்-0006.jpg

TVA_TEM_000178/TVA_TEM_000178_திருக்கோட்டியூர்_சௌம்யநாராயணப்பெருமாள்-கோயில்-0007.jpg

TVA_TEM_000178/TVA_TEM_000178_திருக்கோட்டியூர்_சௌம்யநாராயணப்பெருமாள்-கோயில்-0008.jpg

TVA_TEM_000178/TVA_TEM_000178_திருக்கோட்டியூர்_சௌம்யநாராயணப்பெருமாள்-கோயில்-0009.jpg

TVA_TEM_000178/TVA_TEM_000178_திருக்கோட்டியூர்_சௌம்யநாராயணப்பெருமாள்-கோயில்-0010.jpg

cg103v031.mp4